Saturday, October 9, 2010

அழகோ!! அழகு!!


அழகோ!! அழகு!!

இயற்கை எனும் இளைய கன்னி !

இயற்கை தீட்டிக்காட்டும் வர்ணஜாலங்கள் நிரம்பிய ஒளியோவியம்.
கண்டு களிப்போம்.
இயற்கையை ரசிப்போம்.
இனிய காலைப் பொழுதையும், மனதை மயக்கும் மாலைப் பொழுதையும் ரசிக்க முடிகிறதா நம்மால்? அப்படியென்றால் நமது மனம் தெளிவாக இருக்கிறதென்று பொருள்.
ஆமாம், பல நேரங்களில் நாம் நம்முடைய வாழ்க்கைச் சூழலால் பாதிக்கபட்டு அதன் போக்கிலே சுழற்றப்பட்டு, பலவிதமான பாடுகள் பட்டு அவற்றிலிருந்து மீள்வதற்குள் மாலையும், இனிய காலையும் நம் கவனத்துக்கே வராமல் நழுவிப் போகின்றன. நம் கவலைகள், துயரங்கள், இன்பங்கள், வேலைச் சுமைகள் எல்லாம் இருக்கவே இருக்கின்றன. அவை எங்கேயும் போகாது நம்மைவிட்டு.
அவற்றிலேயே உழன்றுகொண்டிருந்தால் நாம் மற்ற எதையுமே அனுபவிக்கத் தவறி விடுகிறோம் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.
நடு நடுவே இயற்கையை ரசிக்கவும் சற்றே நேரம் ஒதுக்குங்கள். விடியற்காலையில் எழுந்து அந்த விடியற்காலையின் புலரும் கணங்களை, பூக்களின் மகரந்த மணங்களை, கதிரவன் வரும் அழகை, மேகங்கள் ஓவியம் போல உருமாறும் கலையை, புள்ளினங்கள் உற்சாகமாகப் பறக்கும் அழகை, அவற்றின் இனிய குரலை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்.
பறவைகள் வீடு திரும்பு காட்சியையும், மாலைச்சூரியனின் கதிர்கள் மேகங்களில் நுழைந்து வண்ணக் கதிர்களாய் ப்ரபஞ்சமெங்கும் வண்ணக் கோலங்கள் போடும் அழகையும், அதே போல மாலையில் கதிரவன் மறையும் அழகையும், நிலா தோன்றும் அழகையும், ரசிக்கத் தொடங்குவோம்.
மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.
 
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.

































                                             அத்தான காட்டிலே ஒற்றை மான்.


                                                                 செக்கர்வானம்



பளிங்கு நீரில் பளபளப்புடன் பிரதிபலிக்கும் பிம்பங்கள்
























             வளைந்து காணும் வானவில்லின் வர்ணஜாலங்கள்.
































































தீவுத் திடல் 








No comments:

Post a Comment